logo
 கொரோனா தாக்கம்:  சிரமங்களுக்கிடையே  பொருளாதார சீரமைப்பில் பெண்களின் பங்களிப்பு- முனைவர்.பாக்கியலட்சுமி ராஜாராம்.

கொரோனா தாக்கம்: சிரமங்களுக்கிடையே பொருளாதார சீரமைப்பில் பெண்களின் பங்களிப்பு- முனைவர்.பாக்கியலட்சுமி ராஜாராம்.

21/Oct/2020 09:48:38

கொவைட்-19 தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவை சீரமைப்பதில் நிலவும் பல்வேறு சிரமங்களுக்கிடையே பெண்களின் பங்களிப்பு நம்பிக்கை அளிக்கும் வகையில்  உள்ளது என்கிறார் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மை துறை உதவி பேராசிரியர் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மேற்பார்வையாளர் பொறுப்பு முனைவர் பாக்கியலட்சுமி் ராஜாராம்.அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பநிலை,நோயாளிகள் மற்றும் மக்களின் மன ஆரோக்கியத்தில் ஒரு பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்தியது. 2019 -ஆம் ஆண்டு உலகெங்கிலும் உள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார இயக்கம் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை எதார்த்த  உலகிற்கு வெளிப்படுத்தியது. பெண்கள் தங்கள் குடும்பத்தில் ஏதேனும் பாதிப்பு  இருந்தால், அக்கறை மற்றும் பொருட்பகிர்வு ஆகியவற்றை சமாளிக்க அதிக மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள், குறிப்பாக பெண்கள் இந்த விளைவுக்கு விதிவிலக்கல்ல. கொரோனா தொற்று வீட்டிலிருக்கும் பெண்களையும் சுகாதாரப் பணியாளர்களாக அவதாரம் எடுக்க வைத்தது என்பது உண்மையே.

 ஏனெனில்  பெரும்பாலும் பெண்கள் தனது குடும்பம் மற்றும் சுற்றுசூழலுக்கு ஏற்ற நபர்களாக சமூகத்தில் உள்ளனர். இதற்கு இணையாக, தனது குடும்பம் மற்றும் பொது சமூகத்தில் கொரோனா தொற்றில் பாதிப்படைந்தவர்களின் கருத்து அல்லது எண்ணங்களை புரிந்துகொள்வதோடு கருணையை வெளிப்படுத்துவது போன்ற சிறப்பான திறன் பெற்றவர்கள் பெண்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

புதுமையான மேலாண்மை உத்திகள் மற்றும் வெளிப்புற காரணிகளின் தாக்கம் இவற்றின் மூலம் கொவைட்-19  நெருக்கடியைக் குறைத்தல் மற்றும் குடும்ப பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துவது பற்றி இப்பகுதி விரிவுபடுத்துகிறது. இதன்மூலம் கொவைட்-19 பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு முக்கிய நெறிமுறைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடி சூழலைசமாளிக்க பாலின அடிப்படையிலான கொள்கையை பின்பற்ற பரிந்துரைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடி காலக்கட்டத்தில்முக்கிய விவாதமாக குடும்பத்தில் கொரோனா வைரஸின் பீதி மற்றும் ஊரடங்கு, சமூக விலகல்,வேலையில்லாத்  திண்டாட்டத்தை சமாளிப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

சீனாவின் வுஹானில் இருந்து வந்த கொரோனா வைரஸ் பரவியதால், 2019 -ஆம் ஆண்டின் இறுதியில் மற்றும் 2020 -ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறப்பு விகிதத்தால் உலகமே மிரண்டது. வளர்ந்து வரும் தொற்றுநோய் நெருக்கடி, பொருளாதாரத்தில் மக்களை  வீழ்த்தியது. தனிமைப்படுத்தல், ஊரடங்கு, சமூக விலகல், பணிபுரியும் இடத்திலிருந்து சொந்த ஊருக்கு வெளியேற்றுதல், வேலையின்மை மற்றும் பணிநீக்கம் போன்ற பல காரணங்களால் முடக்கப்பட்ட அல்லது செயலற்ற தனிப்பட்ட வாழ்க்கையில் ஆண்கள் இருந்தபோதிலும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் ஆபத்தை எதிர்கொண்டு பணப்பற்றாக்குறையை சமாளித்து சமூக நல்வாழ்வை நிலைநாட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு பெண்களும் தனது குடும்ப தலைவருக்கு உறுதுணையாக இருந்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட செயலாற்றி வருகின்றனர். சிரமங்களுக்கு நடுவே வாய்ப்பு உள்ளது என்ற சொற்கள் இந்த கொவைட்-19 பேரழிவில் பெண்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது. சமூக சேவை, வீட்டு வேலைகள், தொழில்துறை மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள்  என்பது உலகளவில் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது, அவைகளின் உற்பத்தித்திறனில்  ஒரு முக்கிய பங்களிப்பாளராக மூன்றில் ஒரு பங்கு பெண் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த கொவைட்-19 சூழ்நிலை சமத்துவம் மற்றும் பாலின சமத்துவத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பைக் கொண்டுவந்ததன் மூலம் பெண்கள் மேலும் மேன்மையடைகின்றனர்.

கொவைட்-19 நெருக்கடி  பராமரிப்பு சுமைகள்

நெருக்கடி காலத்தில் பெண்கள், ஆண்கள், சிறுவர்,சிறுமியர் என அனைவரையும் பல்வேறுவிதமாகப் பாதிக்கிறது. வைரஸால் இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆண்களே அதிகம் என்பதால் பெண்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பராமரிப்பு சுமைகள், வருமானம் மற்றும் கல்வியில் இடையூறுகள், உடல்நலம் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு அவர்களின் நிலை மோசமாக உள்ளது. நிலம் மற்றும் தங்கள்  சொத்துக்களை வறுமையால் இழக்க நேரிடலாம்.

ஏற்கெனவே வறுமையில் வாடும் பெண்களுக்கு, இந்த தாக்கங்கள் ஒட்டுமொத்தமாக அவர்களின் பொருளாதார வலிமைக்கு ஒரு அதிர்ச்சியாக இருக்கக்கூடும், மேலும் மருந்து மற்றும் உணவு போன்ற முக்கியமான தேவைகளை வாங்குவதற்கான அவர்களின் திறனைத் தடுக்கிறது.நோய் பரவல்கள் பெண்கள் மற்றும் வயதான நோய்வாய்ப்பட்ட நபர்கள் இந்தத் தொற்றின் தாக்கத்தால் பாதிக்கப்படலாம்.   நோய் பரவல் காரணமாக குடும்பங்களுக்கு ஏற்படும் பொருளாரதார தாக்கம் குழந்தைகளின், குறிப்பாக பெண்களின் மன அழுத்தத்தினால் பல ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம்.தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கை என்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதகாவே அமைய வேண்டும்.

குழுக்களின்ஈடுபாடு

கொவைட்-19 மீட்புத் திட்டங்களின் வளர்ச்சியில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் தலைமையிலான குழுக்களின் ஈடுபாடு பாதுகாப்பானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருத்தல் வேண்டும்.கடந்தகால தொற்றுநோய்களின் சான்றுகள்  பெரும்பாலும் வழக்கமான சுகாதார சேவைகளிலிருந்து மாறுபடுகிறது என்பதை குறிக்கின்றது. நோய்த் தொற்று பரவலின் போது ஏற்படும் பொருளாதார சவால்கள் பெண்களின் வேலை மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

கடுமையான பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொள்ளும் பெண்கள் தங்கள் பொருளாதார தேவைகளுக்காக அதிக ஆபத்துள்ள வேலைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம். நோய்த் தோற்று பரவலின்விளைவாக பெண்களின் பொருளாதார மேம்பாட்டைப் பாதுகாக்க வேண்டும், ஆதரிக்க வேண்டும் மற்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் . நோய்த் தோற்று பரவலின் போது பணியாற்றும் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருக்கின்றனர்.

கொவைட்-19 பாதிப்பால் செய்யப்பட்ட மாற்றங்கள் நாம் தெளிவான வாய்ப்புகளை உருவாக்க வழிவகை செய்துள்ளது.    பணியிடங்களை மறுபரிசீலனை செய்வதற்கும் கடுமையான வேலை நடைமுறைகள் குறைவதற்கும் ஊரடங்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

வீட்டிலிருந்து வேலை செய்வது பெண்களுக்கு அதிகம் நெகிழ்வுத்தன்மை பயனளிக்கிறது. ஆண்களும் வீட்டிலிருந்து பணிபுரிவதால் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வதற்கு நல்ல  வாய்ப்பாகும். பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் பாலின பாகுபாடு இல்லாமல் தேவைகளை  கட்டுப்படுத்தி பொருளாதாரத்தில் மேன்மையடைகின்றனர் போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். .

பாலின சமத்துவம்

ஆண் பெண் வேறுபாடின்றி பாலின சமத்துவம் கொண்டு வரும் நன்மைகளை இனி நன்றாக உணரமுடியும். பொருளாதார வீழ்ச்சியின் உடனடி மற்றும் ஏற்றத்தாழ்வான தாக்கங்களிலிருந்து பெண்களை சிறப்பாகப் பாதுகாப்பதற்கும், பொருளாதார மீட்சி காலத்தின் மூலம் அவர்களின் பொருளாதாரங்களை வலுவான செயல்திறனுக்காக நிலைநிறுத்துவதற்கும் பயன்படும்.

இந்த கொவைட்-19 -இன் தாக்கத்தால் ஏற்பட்ட முன்னேற்ற சூழ்நிலையை நாம் வித்தியாசமாக செயல்படுத்துவோம். கொவைட்-19 -இல் ஆண் பெண் பாகுபாடு  பற்றிய தாக்கங்கள் குறித்த பார்வை, சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் அதிக கவனம் செலுத்துகிறது, ஆனால் தொற்றுநோய் வெளிப்படையான ஒரு சுகாதார நெருக்கடி என்றாலும், இது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆண்களைப் பாதிக்கும் பொருளாதார நெருக்கடி என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

விவசாயத் துறையில், கொவைட்19  தாக்கம்

விவசாயத் துறையில், கொவைட்-19ன் தாக்கம்  வெளிப்படும், இதன் விளைவாக தனிநபர்கள், வீடுகள் மற்றும் முழு சந்தை அமைப்பிற்கும் நீண்டகால பொருளாதாரத்தில் நிலையற்றத்தன்மை ஏற்படும். இந்த தொற்றுநோய் பரவலின் காரணமாக எல்லைகள் மூடப்பட்டிருப்பதாலும், கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளை விதிப்பதாலும், வேளாண் பொருட்களின் உற்பத்தி இயக்கத்தை நிறுத்துவதாலும் வர்த்தக இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்த சுகாதார சோதனைகள், போக்குவரத்து சவால்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் ஆகியவை விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உற்பத்திக்கு தேவையான ஆதாரங்கள் கிடைப்பதைக் குறைக்கும். விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதை பாதிக்கும் வர்த்தக இடையூறுகள் உரங்கள் மற்றும் உள்ளீடுகளை பெறுவதை மிகவும் கடினமாக்குகின்றன.

 சிரமங்களுக்கு நடுவே வாய்ப்பு உள்ளது

இன்று, பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்கிறார்கள். எனவே அவர்களது குடும்பம் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களையே சார்ந்துள்ளது. பெண்களின் பங்கானது உலகம் முழுவதையும் உலுக்கும் கொவைட்-19 சமயத்தில்  சவாலாக உள்ளது. பெண்கள் அலுவலகம் மற்றும் வீட்டில்  பங்களிக்கும் விதத்தை மாற்றியமைத்துள்ளது என்பது நிதர்சனமே. அதற்கேற்ப கடமைகள் மாறுபடும் அணுகுமுறை மற்றும் பொறுப்புகள் மாறுபடும்.ஆயினும்கூட, கொவைட்-19 க்கு முந்தைய சூழ்நிலையை மீண்டும் உருவாக்கவும், சீரான நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவும் அரசாங்கம் அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறது.

இதில் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் குடும்பத் தலைவிகளின் பங்களிப்பும் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கிறதுஒவ்வொருவருக்கும் வெவ்வேறு போராட்டங்களையும், போராட்டங்கள் ஒரு நாள் முடிவடையும்என்பதையும் எப்போதும் புதிய தொடக்கங்களுக்கு  வழிவகுக்கும். வாழ்க்கையில் உள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்க நாம் வலுவாகவும் நேர்மையாகவும் இருக்க வைத்தது போன்றவை இந்தத் தொற்றுநோயிலிருந்து மக்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடமாகும். ஆகவே பெண்கள் பொருளாதாரத்தை சீர்செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்  என்பது கொவைட்-19  சமயத்தில் தெளிவாக தெரிய வருகிறது என்றார் முனைவர்.பாக்கியலட்சுமி ராஜாராம்.

Top