logo
வரத்து குறைவால் ஈரோடு சந்தையில்  பெரிய வெங்காயம் கிலோ ரூ.125 விற்பனை

வரத்து குறைவால் ஈரோடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.125 விற்பனை

20/Oct/2020 10:21:57

ஈரோடு:கர்நாடக மாநிலத்தில் தற்போது கனத்த மழை பெய்து வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஈரோடு வஉசி பூங்கா பகுதியில் செயல்பட்டுவரும் நேதாஜி பெரிய சந்தையில்  சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் வெங்காய வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில், சின்ன வெங்காயத்தின் விலையைத் தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும்  அதிரடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் இருந்து தினமும்  ஈரோடு பெரிய சந்தைக்கு  10 லாரிகளில் பெரிய வெங்காயம் வரத்தாகி வந்தது. தற்போது அங்கு பலத்த மழை பெய்து வருவதால் இரண்டு லாரிகளில் மட்டுமே பெரிய வெங்காயம் வந்தது. 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை  பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 வரை விற்பனையாகி வந்தநிலையில், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.105 முதல் 125 வரை விற்பனையானது. பெரிய வெங்காயம் சமையலில் முக்கியமாக இடம் பிடிக்கக் கூடியதாகும். இதனால் மொத்த வியாபாரிகள் ,சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

                                                                               


Top