logo
முடிதிருத்தும் தொழிலாளிகளை இழிவு படுத்தி எடுக்கப்பட்டுள்ள மண்டேலா திரைப்படத்தைத் தடை செய்ய கோரிக்கை

முடிதிருத்தும் தொழிலாளிகளை இழிவு படுத்தி எடுக்கப்பட்டுள்ள மண்டேலா திரைப்படத்தைத் தடை செய்ய கோரிக்கை

09/Apr/2021 06:26:06

புதுக்கோட்டை, ஏப்: தனியார் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒளிபரப் பான மண்டேலா திரைப்படத்தை தடை செய்து அந்தப்படத்தின் இயக்குநரை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாவட்ட அமைப்புச்செயலாளர் எம்.பி.முத்து வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் மண்டேலா என்ற திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அந்தப்படத்தில் கிராமப்புற பகுதியில் முடி திருத்தும் தொழிலாளியாக நடிகர் யோகி பாபு  நடித்திருந்தார்கள்.

இந்தப்படத்தில்  முடிதிருத்தும் தொழிலாளர்களை  கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்றும்,  தீண்டத்தகாதவர்கள் போல் பின் வாசல் வழியாக  வரச் சொல்வது  வேலைக்கு கூலி கேட்டால் கஞ்சி வழங்குவதும்,  காரில் ஏற்றும் பொழுது ஆதிக்க சாதிக் கொடுமையை வெளிப்படுத்தும் விதமாக சரிசம மாக அமரக்கூடாது என்று அடிப்பதும். பின்பு அந்த முடிதி ருத்தும் தொழிலாளி செருப்பால் அடிப்பது  போன்ற   இழிவான  காட்சிகள்  அமைக்கப்பட்டு ள்ளன. 

மருத்துவ சமுதாய மக்களை இப்படி இழிவு படுத்தியதைப் போல  மற்ற இனத்தவர்களை  வெளிப்படையாக இழிவு படுத்தி காட்சிகள் வைக்க  முடியுமா என்பதே எங்கள் கேள்வி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் படத்தின் இயக்குனர் படத்தில் நடித்த நடிகர்கள் உள்பட அனைவர் மீதும் தேசிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலமாக கடும் நடவடிக்கை எடுப்பதுடன் இந்த திரைப் படத்தை தடை செய்ய வேண்டும். 

இந்தப் படத்தை பார்த்த எங்கள் சமுதாயத்தை சார்ந்த மக்கள் மிகவும் மனவேதனையடைந் துள்ளனர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற எந்த இனத்தையும் இழிவு படுத்தும்  திரைப் படங்களை தயாரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென  எச்சரிக்கையுடன் வேண்டு கோள் விடுக்கிறோம்.

மேலும்  முடி திருத்தும்  சமுதாயத்தை இழிவுபடுத்தி வன்முறையை தூண்டும் வகையில் படத்தை தயாரித்தவரையும், அதைய இயக்கிவரையும்  கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  இன்று தமிழக காவல்துறை தலைவர். டிஜிபியை நேரில்  சந்தித்து மாநில நிர்வாகிகள்  அளித்துள்ள புகார் மனு மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எம்.பி. முத்து  தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

Top