logo
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா ஈரோட்டில்  உற்சாகக் கொண்டாட்டம்

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழா ஈரோட்டில் உற்சாகக் கொண்டாட்டம்

17/Oct/2020 03:06:08

ஈரோடு: அதிமுக  தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் முடிவடைந்து இன்று 49-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, இன்று ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக. சார்பில் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள எம்ஜிஆர், அண்ணா உருவச்சிலைகளுக்கு எம்எல்ஏ-க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், முன்னாள் துணை மேயர் கே.சி .பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயராஜ், கோவிந்தராஜ், முருகசேகர், தங்கமுத்து, ராமசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம்,  ஜெயலலிதா பேரவை மாவட்ட  இணைச் செயலாளர் வீரகுமார்.

மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் நந்தகோபால், பெரியார் நகர் பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா, தொழிற்சங்க இணைச்செயலாளர் மாதையன், சிந்தாமணி இயக்குனர் பொன் சேர்மன், வக்கீல் ஏசைய்யன், துரை சக்திவேல், மாணவர் அணி பொருளாளர் முருகானந்தம், சூரம்பட்டி தங்கவேலு  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top