logo
வடகிழக்கு பருவமழை பேரிடர்களை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார்நிலையில் இருக்கஅறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை பேரிடர்களை சமாளிக்க அனைத்து துறையினரும் தயார்நிலையில் இருக்கஅறிவுறுத்தல்

15/Oct/2020 09:35:20

புதுக்கோட்டை: மழைக்காலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில்  பள்ளிகள் மற்றும் புயல் பாதுகாப்பு மையத்தை தயார் நிலையில் வைக்க வேண்டும் என  புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்பு கல்லோலிகர்  அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து அரசு அலுவலர்களுடன ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பி. உமாமகேஸ்வரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜிசரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்ற இன்று  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழையின் போது  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கையில் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மழைக் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்கும் வகையில் பள்ளிக் கூடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 மேலும், பொதுமக்களுக்கு குடிநீர் வசதி உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அவர்கள் தங்கும் இடங்களிலேயே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் குடிநீரை  பாதுகாப்பாக வழங்கவும், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிக ளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகளை மேற்கொள்ளவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மழைக்காலங்களில் சாய்ந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி பொது மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை  உறுதி செய்வதுடன் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருந்து மாத்திரைகள் கையில் இருப்பதை உறுதி செய்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எதிர்வரும் வட கிழக்கு பருவமழையின் போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் அலுவலர்கள் உடனுக்குடன் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஷம்பு கல்லோலிகர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Top