logo
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்கக்கோரிக்கை

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்கக்கோரிக்கை

15/Oct/2020 09:11:33

ஈரோடு: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளதால் ஈரோடு எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுப்பிரியர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்

டாஸ்மாக் மதுக்கடைகளில்  அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகம், டாஸ்மாக் மதுவிற்பனைக் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. அதிகபட்ச சில்லறை விலை (எம்.ஆர்.பி)யை விட அதிக விலைக்கு மதுவிற்பனை செய்வதைத் தடுக்க டாஸ்மாக் நிறுவனம் அதன் ஆய்வுக் குழுக்களுக்கு இலக்குகளை நிர்ணயித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது.

 இங்கு பெரும்பாலான கடைகளில் எம்.ஆர்.பி-க்கு மேலே ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ. 15 வரை மதுப்பிரியர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் படுவதாக புகார் எழுந்துள்ளதுஒவ்வொரு பிராந்தியத்திலும் சிறப்பு பறக்கும் குழு ஒவ்வொரு மாதமும் அந்தந்த மண்டலங்களில் 240 கடைகளை சரிபார்க்க வேண்டும். மூத்த பிராந்திய மேலாளர்கள் 40 விற்பனை நிலையங்களை ஆய்வு செய்து எம்.ஆர்.பி. விலைக்கு மேல் மதுபானங்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த பகுதி போலீசார் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் ஒரு சில பகுதிகளில் போலீஸார் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். எனவே. ஈரோடு மாவட்ட எஸ்பி தங்கதுரை  கவனம் செலுத்தி  நடவடிக்கை எடுப்பாரா என மதுப்பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்

Top