logo
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்த 420 மாடுகள்

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்த 420 மாடுகள்

15/Oct/2020 03:07:37

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை சுங்கச்சாவடி அருகே வாரந்தோறும் புதன்கிழமை, வியாழக்கிமை மாட்டு சந்தை கூடுகிறது. இது தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாட்டுச்சந்தையாகும். இங்கு புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவை மாடுகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த சந்தைக்கு வாரந்தோறும் 800 முதல் 900 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் போன்ற வெளிமா நிலத்தினரும் இங்கு வந்து மாடுகளை வந்து வாங்கி செல்வது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து மாட்டு சந்தைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த 6 மாதங்களாக கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நடைபெறவில்லை.

 இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில், முதல் சந்தை  கடந்த 1-ஆம் தேதி கூடியது. ஆனால், மாட்டுச் சந்தை செயல்படுவது குறித்து விவசாயிகளுக்கும், மாடு விற்பனையாளர்களுக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்படாததால் மாடுகள் பேதிய எண்ணிக்கையில் கொண்டுவரப்படவில்லை. இதையடுத்து, இந்த கடந்த வாரம் கூடிய சந்தையில்  பசு மாடு, எருமை மாடு, கன்று என அனைத்தும் சேர்த்தே 130 மாடுகள் மட்டுமே வந்தன.

 மாடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால், மாடுகள் போதியல எண்ணிக்கையில்  வராததால், வெளிமாநில வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், இன்று 15.10.2020)  கூடிய மாட்டுச்சந்தையில், கடந்த வாரத்தை காட்டிலும் மாடுகள் எண்ணிக்கை சற்று  அதிகரித்தது. 250 கறவை மாடுகளும், 70 வளர்ப்பு கன்றுகளும், 90 எருமை மாடுகளும் விற்பனைக்கு வந்தன. வழக்கமான நாட்களில் வரும் எண்ணிக்கை காட்டிலும் குறைவாகவே வந்துள்ளது. இந்த முறையும் அதே அளவில் வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்தனர். இந்த அனைத்து மாடுகளும் விற்பனையாகின

முன்னதாக, மாஸ்க் அணிந்து வரும் வியாபாரிகள் மட்டுமே சந்தை பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயிலில் வியாபாரிகளின் உடல் வெப்ப நிலையை தெரிந்துகொள்ளும் வகைகள் தெர்மல் ஸ்கேன்கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதுகைகளில் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் வியாபாரிகளின் பெயர், ஊர், செல்போன் எண், முகவரி போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

Top