logo
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

15/Oct/2020 01:48:11

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் பகுதியில்  வாடகை கொடுக்காமலும் அனுமதி இன்றியும்  செயல்பட்டு வந்த நகராட்சிக்கு சொந்தமான 10 கடைகளுக்கு  நகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

புதுகை நீதிமன்றம் அருகே பழைய பேருந்து நிலையம் இயங்கி வந்த நிலையில், அங்கு இட நெருக்கடி ஏற்பட்டதால் நகராட்சி மூலம் சுமார் 46 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை 19.4.1981 -இல் நிலையத்தை அமைச்சர் ஆர்.எம்.வீ. திறந்து வைத்தார். இதில் 60 கடைகளும், 10 -க்கும் மேல்பட்ட தினசரி வாடகை அறைகளும் மூன்று கட்டணக் கழிப்பறை கழிப்பறைகளும் அமைந்துள்ளன.

இதைத் தொடந்து, கடந்த 2012 -ல் வந்த நகராட்சி நூற்றாண்டு விழாவின் போது ஒதுக்கப்பட்ட ரூ.50 கோடி சிறப்பு நிதியில் சுமார் ரூ. 1.65 கோடி மதிப்பில் இந்தப் பேருந்து நிலையத்தில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தில் உள்ள  60 க்கும் மேற்பட்ட கடைகளில், சில கடைக்காரர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக  நகராட்சிக்குவாடகை செலுத்தவில்லையாம். இது குறித்து நகராட்சி நிர்வாகம் பல முறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளது.

ஆனால், இதுவரை வாடகை செலுத்தாததால் ஹோட்டல், டீக்கடை உள்பட 6 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி அப்பகுதியில் செயல்பட்டு வந்தநான்கு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டன. புதுக்கோட்டையில் நகராட்சி ஒரே நாளில்  10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் வணிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Top