logo
உலகம் முழுவதும்  3.35 கோடி பேருக்கு கொரோனா வைரஸ்: பாதிப்பு..10.06 லட்சம் பேர் பலி   அதிவேகமாகப் பரவும் நாடாக மாறிய இந்தியா

உலகம் முழுவதும் 3.35 கோடி பேருக்கு கொரோனா வைரஸ்: பாதிப்பு..10.06 லட்சம் பேர் பலி அதிவேகமாகப் பரவும் நாடாக மாறிய இந்தியா

29/Sep/2020 11:44:53

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சத்தை கடந்தது.சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் மற்றும்  பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 35 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 35 லட்சத்து 41 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 76 லட்சத்து 67 ஆயிரத்து 24 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 375 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 48 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்: 

அமெரிக்கா - 73,61,205

இந்தியா - 60,74,703

பிரேசில் - 47,48,327

ரஷியா - 11,59,573

கொலம்பியா - 8,18,203

பெரு - 8,08,714

மெக்சிகோ - 7,48,266

ஸ்பெயின் - 7,30,317

அர்ஜெண்டினா - 7,23,132

தென் ஆப்பிரிக்கா - 6,71,669. 

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்

இந்தியா - 50,16,521

அமெரிக்கா - 46,06,908

பிரேசில் - 40,84,182

ரஷியா - 9,45,920

கொலம்பியா - 7,22,536

பெரு - 6,70,989

தென் ஆப்ரிக்கா - 6,04,478. 

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்

அமெரிக்கா - 2,09,776

பிரேசில் - 1,42,161

இந்தியா - 95,542

மெக்சிகோ - 76,430

இங்கிலாந்து - 42,001

இத்தாலி - 35,851

பெரு - 32,324

பிரான்ஸ் - 31,808

ஸ்பெயின் - 31,411

ஈரான் - 25,779

கொலம்பியா - 25,641.

Top