logo
உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலி: பாதிப்பு 3.87 கோடியாக உயர்வு

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலி: பாதிப்பு 3.87 கோடியாக உயர்வு

15/Oct/2020 12:37:26

உலக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 87 லட்சத்து 43 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 214  நாடுகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 87 லட்சத்து 43 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 2,91,23,542 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8,523,446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 70,431 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 10,96,876 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 63,80,456 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 81,50,043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,21,843 பேர் உயிரிழந்துள்ளனர்.

நோய்த்தொற்று பாதிப்பில் இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது  இடங்களில் உள்ளது. இந்தியாவில் 73,05,070 பேரும், பிரேசிலில் 51,41,498 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஷியாவில் (13,40,409), அர்ஜென்டினா (931,967), கொலம்பியா (930,159), ஸ்பெயின் (908,056), பெரு (853,974), மெக்சிகோ (830,502), பிரான்ஸ் (820,376) ), தென்னாப்பிரிக்கா (696,414), இங்கிலாந்து (657,459), ஈரான் (513,219), சிலி (485,372), ஈராக் (413,215), பங்களாதேஷ் (382,959), இத்தாலி (372,799) பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு பட்டியலில் பிரேசில் 1,51,779 உயிரிழப்புகளுடன் இரண்டாவது இடத்திலும்இந்தியா 1,11,311 உயிரிழப்புகளுடன் மூன்றாவது இடத்திலும், 23,205 உயிரிழப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

 பலிஎண்ணிக்கை: மெக்ஸிகோ (84,891), இங்கிலாந்து (43,245), இத்தாலி (36,289), பெரு (33,419), ஸ்பெயின் (33,413), பிரான்ஸ் (33,058), ஈரான் (29,349), கொலம்பியா (28,306), அர்ஜென்டினா (24,921), ஷியா (23,069), தென்னாப்பிரிக்கா (18,151), சிலி (13,415), ஈக்வடார் (12,264), இந்தோனேசியா (12,156), பெல்ஜியம் (10,244) மற்றும் ஈராக் (10,021) பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்

 

Top