logo
பள்ளிக் கல்வித்துறையில் கருணை அடிப்படையில் நியமனத்திற்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வாரிசுதாரர்கள்..!

பள்ளிக் கல்வித்துறையில் கருணை அடிப்படையில் நியமனத்திற்காக 10 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வாரிசுதாரர்கள்..!

14/Oct/2020 11:43:08

புதுக்கோட்டை: பள்ளிக் கல்வித் துறையில் பணியிலிருக்கும்போது இறந்த அரசுப் பணியாளர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் இறந்த பணியாளர்களின் இறப்பு முன்னுரிமையின் அடிப்படையில் 04.07.2010 அன்று மரணமடைந்த விழுப்புரம் மாவட்டம் கோலியனூர; சாணாந்தோப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர; திரு ஆர;.நசீர;கான் என்பவரது  மகள் செல்வி .சாந்தினி என்பவருக்கு ஒன்பதாண்டுக்கு மேலான காலதாமதத்தில்  விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலரால் 6.01.2020 இளநிலை உதவியாளராக நியமனம் அளிக்கப்பட்டுள்ளது. 5.7.2010 -க்குப் பின்னர் பணியின் போது இறந்த கல்வித் துறை பணியாளர்களின் வாரிசுகள் நியமனத்திற்காக பத்தாண்டுகளுக்கு மேலாக காத்துக் கொண்டிருக்கின்ற அவலம் பள்ளிக் கல்வித் துறையில் நிகழ்ந்து வருகிறது..

அரசு அலுவலகமானாலும் நிறுவனமானாலும் திறமையாகப் பணியாற்றக்கூடிய பணியாளர்களும்  அவர்களை நிர்வகிக்கக் கூடிய திறமை மிக்க அதிகாரிகள் இருந்தால் அந்த நிறுவனம் சிறப்பாக அமையும். அதேபோல் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றிட நிர்வாகத்தின் சார்பில் பணியாளர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதே போல், தமிழக அரசு தங்களது பணியாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கி வருகிறது.

பணியிலிருக்கும் அலுவலரோ அல்லது பணியாளரோ மரணமடைந்தால் அவர்களுக்கு இன்ஸ்யூரன்ஸ் திட்டம் மூலமாக குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பணியிலிருக்கும் அரசு அலுவலர்கள் மரணமடையும் நேர்வுகளில் அந்த அலுவலர்களின் குடும்பம் திடீரென வருமானம் இழந்து அவதிப்படும் அவல நிலையைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு 1972-ஆம் ஆண்டு முதல் சிறப்பான ஒரு திட்டத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வருகின்றதுஅந்தத்திட்டம்தான் கருணை அடிப்படை நியமனத் திட்டம்

வருவாய் ஈட்டும் அரசு ஆண் அல்லது பெண் அலுவலர்கள் திடீரென இறந்துவிட்டால் குடும்பத் தலைவனை அல்லது தலைவியை இழந்து அந்தக் குடும்பம் நிர்க்கதியாக வாடும் நிலை ஏற்படக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் அந்தப் பணியாளரின் வாரிசுகளில் 10-ஆம் வகுப்புக்கு மேல் தகுதி ஒருவருக்கு  அரசு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர் மற்றும் அதற்கிணையான பதவியில் நியமனம் வழங்கி இறந்த பணியாளரின் குடும்பம் வறிய நிலையில் வாடும் நிலையினைத் தவிர்க்க வழி செய்துள்ளது. அதே போல் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத வாரிசுதாரர்களுக்கு அடிப்படைப் பணியான அலுவலக உதவியாளர் இரவுக் காவலர் துப்புரவுப் பணியாளர் போன்ற பணிகளில் நியமனம் வழங்கி வருகின்றது.

                கருணை அடிப்படையில் நியமனம் வழங்கிடும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசாணைகள் மற்றும் அரசுக் கடிதங்கள் மூலமாக ஒவ்வொரு துறைக்கும் அவ்வப்போது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு கருணை அடிப்படை நியமனங்கள் வழங்கும்போது ஏற்படுகின்ற இடர்ப்பாடுகள் தவிர்க்கும் பொருட்டு இறந்த அரசுப் பணியாளரின் குடும்பம் எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் பணியாளர் இறந்தவுடன் காலதாமதம் செய்யாமல் கருணை அடிப்படையில் நியமனம் வழங்கிட அறிவித்து  அனைத்து துறைகளுக்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது போன்று  வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 48 ஆண்டுகளுக்குள்  46 அரசாணைகளும் இரண்டு நீதிமன்ற தீர்ப்புகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன

வருவாய் ஈட்டும் அரசுப் பணியாளர் மரணமடையும் நிகழ்வுகளில் அவரது வாரிசுகளுக்கு வேலை வேண்டி உரிய படிவங்களில் பணியாளர்  பணியாற்றிய அலுவலகத் தலைமை மூலமாக தேவையான ஆவணங்களுடன் மூன்றாண்டுகளுக்குள் விண்ணப்பிக்கவேண்டும். கருணை நியமனம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தினை அலுவலகத் தலைவர் ஒரு மாதங்களுக்குள் பரிசீலனை செய்து துறைத் தலைவருக்கு அனுப்பி வைக்கவேண்டும்துறைத் தலைவர் கருணை அடிப்படையில் நியமனம் செய்வதற்கு காலிப் பணியிடம் இருப்பின் 15 நாள்களுக்குள் விண்ணப்பதாரருக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. நியமனத்தில்  காலதாமதம் ஏற்பட்ட்டால் அதை விண்ணப்பதாரருக்கு துறைத் தலைவர் தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு நெறிமுறைகள் அரசாணைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறையில் கருணை அடிப்படையில் நியமனம் கிடைக்க 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான் உள்ளது.

இது குறித்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஜனார்தனம் கூறியது:  

கருணை அடிப்படையில் நியமனம் அளிப்பதற்கு காலிப்பணியிடம் ஏதும் இல்லை எனில் துறைத் தலைமை அந்தந்த மாவட்ட ஆட்சியரை அணுக வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த விண்ணப்பதாரருக்கு கருணை அடிப்படையில் நியமனம் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்வார். இதனால் கருணை அடிப்படை நியமனத்திற்கு விண்ணப்பதாரர்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும்.

இந்த நடைமுறை அனைத்து அரசுத் துறைகளுக்கும் பொதுவானதாகும். தற்போது கருணை அடிப்படையில் நியமனம் வழங்குவது தொடர்பாக நடைமுறை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையால் அரசாணை 18 / 23.01.2020 -இல் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து துறைகளிலும் பணியின்போது இறந்த அரசுப் பணியாளரின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டு வருகிறது.

இதே போன்று, பள்ளிக் கல்வித் துறையில் விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலரின் 6.1.2020 தேதியிட்ட செயல்முறைகளின்படி,  .சாந்தினி என்பவருக்கு விழுப்புரம் மாவட்டம், சோழகனூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.           கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளராக நியமனம் வழங்கப்பட்ட  .சாந்தினி என்பவரது தந்தை; விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் சாணாந்தோப்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தபோது 4.7.2010 அன்று மரணமடைந்தவராவார்.

 பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படை நியமனம் அளிப்பதற்கு பணியாளர் இறந்த தேதி அடிப்படையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. கருணை அடிப்படை நியமனம் குறித்து என்னால் பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட விவரங்கள் அடிப்படையில் பொது தகவல் அளிக்கும் அலுவலரிடமிருந்து பின்வரும் தகவல்கள் தெரிய வருகின்றன.

பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் மற்றும் அதனை ஒத்த பணி நியமனத்திற்காக காத்திருப்போர் எண்ணிக்கை  (31.12.2019 வரை ஆண்டு வாரியாக) தொடர்பாக பட்டியல் ஏதும் தயாரிக்கப்படுவதில்லைஇளநிலை உதவியாளர் மற்றும் அதனை ஒத்த பணிகளுக்கான கருணை அடிப்படை நியமனத்திற்கு காத்திருப்போர் பட்டியல்  ஆண்டு தோறும்  வெளியிடப்படுவதில்லைகருணை அடிப்படை நியமனத்திற்காக காத்திருக்கும் வாரிசுதாரருக்கு அவரது முன்னுரிமை நிலையினை அறிந்துகொள்ளும் வகையில் காத்திருப்போர் வரிசை எண்  தெரியப்படுத்துவதில்லை நிரந்தர வரிசை எண் ஏதும் இல்லைஇளநிலை உதவியாளர் அல்லது அதனை ஒத்த பணியிடங்களுக்கு  கருணை அடிப்படையில் பணி நியமனம் மாநில அளவில் அரசு ஊழியர் இற்நத தேதி முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம்  பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் கல்வித் துறையில் அரசுப் பணியாளர; இறந்த நாள் முன்னுரிமைப்படி இறுதியாக 4.7.2010 அன்று இறந்த ஆசிரியரின் வாரிசுக்கு  கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி 6.01.2020 அன்று விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலரால் ஒன்பதாண்டுகக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ளதுஇதன் மூலம் பள்ளிக் கல்வித் துறையில்  கருணை அடிப்படை  நியமனத்திற்கு பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதை அறிந்து கொள்ளமுடிகிறது.

மேலும், 5.7.2010 -க்குப் பின்  இன்றுவரை  இறந்த அரசுப் பணியாளர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் நியமனத்திற்காக பத்தாண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்கின்றனர்இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது நம்முன்னே நிற்கும் மாபெரும் கேள்விக்குறி. வருவாய் ஈட்டும் பணியாளர் இறந்த பின்னர் அந்தப் பணியாளரின் வாரிசுக்கு நியமனம் பெறும் வரை அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் எந்த வகையில் பாதிக்கப்படும் என்பதை அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்

பள்ளிக் கல்வித் துறையில் கருணை அடிப்படை நியமனத்திற்காக காத்திருப்போர் எண்ணிக்கை விவரங்கள் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இல்லை, கருணை அடிப்படை நியமனத்திற்கான காத்திருப்போர் பட்டியல் வெளியிடப்படுவதில்லை என்ற  தகவல்கள் இயக்குநர் அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மரணமடைந்த வருவாய் ஈட்டும் அரசுப் பணியாளரின் வாரிசு கருணை அடிப்படையிலான நியமனம் எப்போது கிடைக்கும் என அறிய முடியாமல் திக்கற்ற நிலையில் அந்த குடும்பங்களின் வாரிசுகள் மிகுந்த ஏமாற்றத்துடன்  காத்திருக்க வேண்டியுள்ளது. மரணமடைந்த அரசுப் பணியாளரின் குடும்பம் பாதிக்கக் கூடாது என்ற அரசின் நோக்கம் கல்வித்துறையில் செயல்படுத்தப்படவில்லை. கருணை அடிப்படையில் நியமனத்திற்காக ஆண்டுக் கணக்கில் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை.

எனவே, கருணை அடிப்படை நியமனம் குறித்த  அரசாணைகளையும்   நீதிமன்றத் தீர்ப்புகளையும்  பள்ளிக் கல்வித் துறை அறவே கண்டு கொள்வில்லை என்பதையும் அறியமுடிகிறது. கருணை அடிப்படையில் நியமனம் செய்வதற்கு காலிப் பணியிடம் இல்லாத நிலையில் அரசாணை எண்18 / 23.01.2020-இல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றினாலே பள்ளிக் கல்வித் துறையில் கருணை நியமனத்திற்காக காத்திருப்போர் எவரும் இல்லை என்ற நிலை ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டு  கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை  துரித நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என்று . ஜனார்த்தனம் தெரிவித்த்துள்ளார்..

 

Top