12/Mar/2021 05:03:49
புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை, திருமயம் சட்டமன்ற தொகுதி உள்பட 6 தொகுதிகளில் நமது மக்கள் கட்சி- தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து நமது மக்கள் கட்சி தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தலைவர் மு.ராஜமாணிக்கம் ஒப்புதலின்படி மாநில பொதுச்செயலாளர் மூ. சரவணதேவா வெளியிட்ட அறிக்கையில், எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட 22 தொகுதிகளுத்கான முதல்கட்ட தொகுதிகளின் பட்டியலின்படி, பின் வரும் சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதற்கான 6 வேட்பாளர்களின் பட்டியை நமது மக்கள் கட்சி வெளியிடுகிறது.
இதில், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நமது மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மூ. சரவணதேவா, திருமயம் சட்டமன்ற தொகுதியில் தெற்கு மாவட்டத்தலைவர் க. நந்தகுமார், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் பி.சி. அமுதன், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் மாநில விவசாய அணித்தலைவர் என். குணசேகரன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் மதுரை மாவட்ட செயலாளர் என்.வி.ஆர்.சி. ராஜாமணி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் வேலூர் மாவட்ட செயலாளர் து. புருஷோத்தமன், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகதாஸ் ஆகியோர் நமது மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.