logo
 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸார்  கையெழுத்து இயக்கம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸார் கையெழுத்து இயக்கம்

13/Oct/2020 04:59:16

ஈரோடு: மத்திய பாஜக மோடி அரசால் அண்மையில்  நடந்து  முடிந்த பாராளுமன்ற  கூட்டத்தொடரில்  விவசாயிகளுக்கும்,  விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும்  சீர்குலைக்கும்   வகையில்  மூன்று கருப்பு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்,  பெரும் பண்ணை விவசாயிகளுக்கும் ஆதரவான மூன்று விவசாய தொழில் சார்ந்த மசோதாக்களை தான் தோன்றித்தனமாக கொண்டுவந்து  விவசாயிகளுக்கும், மக்களுக்கும்  பேரதிர்ச்சியை தந்துள்ளது.

 பாஜக அரசின் இந்த விவசாயிகள் விரோதச்  செயலை கண்டித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் மக்கள்.ஜி.ராஜன் தலைமையில் இன்று முள்ளம்நாதகவுண்டம்பாளையம்  கிராமத்தில்  விவசாயிகளையும். விவசாய தொழிலாளிகளையும் நேரில் சந்தித்து துண்டறிக்கை விநியோகித்து, கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.

இன்று(13.10.2020) தொடங்கி ஒரு வார காலத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி அதை மாநிலத் தலைவர் .கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம்  ஆகியோரிடம் அளிக்கப்படும் என்று  மக்கள் ஜி. ராஜன் தெரிவித்தார். 

இதில், சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏ ஆர் எம் பழனிச்சாமி  கலந்துகொண்டு விவசாயிகளுக்கு துண்டு பிரசுரத்தை வழங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ரவி, மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், ஊராட்சி தலைவர் கிருஷ்ணன், செல்வகுமார், பிரதாப், சண்முகம், சுகுமார் திருமூர்த்தி, சதீஷ்குமார், இளைஞர் காங்கிரஸ் ஆரிப் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


Top