logo
ஈரோடு தெற்கு மாநகர திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு தெற்கு மாநகர திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

12/Oct/2020 07:44:35

ஈரோடு தெற்கு மாவட்டம், மாநகரம் கருங்கல்பாளையம் பகுதி 52 -ஆவது வட்ட திமுக சார்பில் இணைய தளம்மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று(அக்.12) நடைபெற்றது. 

திமுக தலைவர் மு க ஸ்டாலின்  ஆலோசனையின் பேரில் மாவட்ட கழக செயலாளர் சு. முத்துசாமி   வழிகாட்டுதலின்படி முன்னாள் மாமன்ற உறுப்பினர் என். பாலாஜி  முன்னிலையில் திமுக உறுப்பினர்கள் சேர்க்கும் இணையதள முகாமினை மாநகர கழகச் செயலாளர் மு.சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர் குறிஞ்சி என். தண்டபாணி, புருஷோத்தமன், மா. தண்டபாணி, அன்பு, பாலன், கோபால், தினகரன்,  சரவணன், இராவணன், தனலட்சுமி, மோகனா, வணக்கம் பெரியசாமி, ரோஸ், அம்மா சௌந்தர் மற்றும்  52 -ஆவது வட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Top