logo
கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்கக்கோரிக்கை

கரும்பு கொள்முதல் நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்கக்கோரிக்கை

11/Oct/2020 11:04:21

இது குறித்துதமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத்தலைவர் கே.ஆர். சுதந்திரராசு, ஈரோடு மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்கச் செயலர் செல்வன் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கை:

 சக்தி சர்கரை ஆலை நிர்வாகம் 2019, 2020 ஆண்டில் விவசாயிகளிடம் இருந்தது கரும்பு கொள்முதல் செய்து 8 மாதமங்கள் கடந்த பிறகும்  இதுவரை பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்கிறார்கள். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு  ஆலையின் நிர்வாக இயக்குநரை கோவையில் சந்தித்தபோது வரும் 20-ஆம் தேதிக்குள்  நிலுவைத் தொகையை வழங்குவதாக தெரிவித்தார்.

  இந்நிலையில்நடப்புபருவத்துக்கான  கரும்பு அரவை பணிகளை  விவசாயிகளின் நிலுவை தொகையை வழங்கிய பிறகே  தொடங்க வேண்டும். ஆலை நிர்வாகம் கூறியபடி வரும் 20-ஆம் தேதிக்குள் தொகையை வழங்கவில்லை என்றால், மாவட்டம் முழுவதும் உள்ள ஆலை அலுவலகத்தை விவசாயிகள் சார்பில் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆலை நிர்வாகத்திடம் பேசி நிலுவைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்நிலுவைத்தொகையை வழங்காதவரை ஆலையில் அரவைப்பணிகளை  தொடங்க ஆட்சியர் அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவித்துள்ளனர்.

 

Top