04/Mar/2021 11:52:35
ஈரோடு, மார்ச்: ஈரோடு ரயில் நிலையத்துக்கும் காவிரி ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
ஈரோடு ரயில் நிலையத்துக்கும் காவிரி ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், இறந்தவா் ஈரோடு நேதாஜி சாலை முனிசிபல் சத்திரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி செல்வன்(49) என்பதும், இவர் ரயில்வே தண்டவாளத் தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரயில் மோதியதால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.