logo
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த  மழை: மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 60 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை: மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 60 மி.மீ மழை பதிவு

10/Oct/2020 07:12:19

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது.

அதே நேரத்தில் சத்தியமங்கலம், குண்டேரிப்பள்ளம் வரட்டுப்பள்ளம் கொடிவேரி போன்ற அணை பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு மாவட்டம் முழுவதும் கனமழை முதல் லேசான மழை வரை வைத்துள்ளது. குறிப்பாக மொடக்குறிச்சி அம்மாபேட்டை குண்டேரிபள்ளம் பவானிசாகர், பவானி, கொடிவேரி ஈரோடு போன்ற பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தி வாங்கியது. இரவு 8 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது அது தொடர்ந்து ஒரு மணிநேரம்  இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அது தொடர்ந்து சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. நேற்றிரவு ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

மொடக்குறிச்சி- 60, அம்மாபேட்டை 41.6, பவானி -40, குண்டேரிபள்ளம் - 38.2, கொடிவேரி-38.2, பவானிசாகர் - 38.2, ஈரோடு-38, கோபி - 27.8, பெருந்துறை - 26, தாளவாடி -21, கவுந்தப்பாடி -20, சென்னிமலை -12 நம்பியூர்- 12 கொடிவேரி -11 வரட்டுப்பள்ளம் -11 சத்தியமங்கலம் - 10.

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தது. சில மணி நேரம் மின்தடையும் ஏற்பட்டது.

Top