logo
புரட்டாசி மாத நிறைவு சனிக்கிழமை-கடையக்குடி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத நிறைவு சனிக்கிழமை-கடையக்குடி பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு

10/Oct/2020 05:20:21

புதுக்கோட்டையில் அருகில் உள்ள கடையக்குடி  ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோயிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

புதுக்கோட்டையில் அருகில் உள்ள கடையக்குடி    ஸ்ரீ பிரசன்ன ரெகுநாதர் பெருமாள் கோயிலில் (ஸ்ரீ ராமர்கோயில்) புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு விமரிசையாக  நடைபெற்றது. மூலவர்   பிரசன்ன ரெகுநாதர் பெருமாள்சுவாமி, சீதாதேவி, இளையபெருமாள் லெஷ்மணர்  சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.

ஆலயத்தில் உற்சவர்  ஸ்ரீ ராமர், சீதாதேவி, இளையபெருமாள் லெஷ்மணர்  ஆகியோர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பட்டாச்சாரியார்கள் ஆராஅமுதன், பார்த்தசாரதி ஆகியோர்  பூஜைகளை கவனித்தனர். இதில்,  புதுக்கோட்டை இளைய மன்னர், முன்னாள் எம்எல்ஏ. வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் உள்பட பல்வேறு பிரமுகர்கள், சுற்றுவட்டராத்தைச் சேர்ந்த பக்தர்கள் வருகைதந்து வழிபட்டனர். பக்தர்கள்  அனைவருக்கும்  பிரசாதம்  வழங்கப்பட்டது. 

புதுக்கோட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு

புதுக்கோட்டை கிழக்கு மூன்றாம் வீதியில் அமைந்துள்ள  ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி தமிழ்; மாதத்தின் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு பல்வேறுசிறப்பு அபிஷேகங்களுடன் தீபாராதனை நடைபெற்றது.

ஆலயத்தில் உற்சவர் ஸ்ரீபெருந்தேவி நாயகர் சமேத ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீதேவி,  பூதேவி தயார்  ஆகியோர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கருடசேவையில் ஸ்ரீவரதராஜ பெருமாள் காட்சியளித்தார்.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரளான பக்தர்கள் திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

வெயிலில்  பக்தர்கள் நின்று சிரமப்பட்டதை கருத்தில் கொண்டு கோயிலின்  முன்பகுதில் நிழலுக்காக கொட்டகை அமைத்திருந்தால் சிரமத்தை தவிர்த்திருக்கலாம் என கோயில் நிர்வாகத்திடம் பக்தர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

Top