logo
மத்தியபிரதேச அரசியலில் திருப்பம்: முதல்வர் கமல்நாத் ராஜினாமா

மத்தியபிரதேச அரசியலில் திருப்பம்: முதல்வர் கமல்நாத் ராஜினாமா

20/Mar/2020 03:15:21

மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னரே, முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கமல்நாத் தெரிவித்துள்ளார்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல்நாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் பொது செயலாளருமான ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் பா..,வில் இணைந்தார். அவரது ஆதரவு எம்.எல்..,க்கள் 22 பேர் கடந்த வாரம் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அதற்கான கடிதத்தை கவர்னர் லால்ஜி டாண்டன் மற்றும் சபாநாயகர் பிரஜாபதிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 அமைச்சர்களும் அடங்குவார்கள். அவர்களின் ராஜினாமாவை கவர்னர் ஏற்று கொண்டார்.
இதனால், கமல்நாத் அரசு பெரும்பான்மை இழந்தது இதனையடுத்து சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என கவர்னர் டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து பா..,வின் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்ட 9 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இன்று(மார்ச் 20) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி உத்தரவிட்டது.

இந்தநிலையில் போபாலில் செய்தியாளரை சந்தித்த முதல்வர் கமல்நாத் 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்று 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய மக்கள் எங்களுக்கு வாய்ப்பு வழங்கினார். மக்கள் அளித்த தீர்ப்பிற்கு பா.., துரோகம் செய்கிறது. ஆரம்பம் முதலே, எங்களது அரசை முடக்க பா.., முயற்சி செய்தது,. மேலும் அரசுக்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டு இல்லை எனக் கூறிய முதல்வர் கமல்நாத், கவர்னரை சந்தித்து முதல்வர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கொடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

Top