logo
சென்கோப்டெக்ஸ் சங்கத் தேர்தலில் முறைகேடு: ஏஐடியுசி தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சென்கோப்டெக்ஸ் சங்கத் தேர்தலில் முறைகேடு: ஏஐடியுசி தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

09/Oct/2020 10:18:12

சென்கோப்டெக்ஸ் சங்கத் தேர்தலில் முறைகேடு: ஏஐடியுசி தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்கோப்டெக்ஸ் என்கிற ஏஏ.399 சென்னிமலை தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத் தேர்தலில், ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக வேட்புமனுத்தாக்கலுக்கான ஒப்புகை ரசீது வழங்காதது,

வேட்புமனு பரிசீலனைக்கு அழைக்காதது, எந்தவிதமான காரணமுமின்றி முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஆறு பேரின் பெயர்கள் இல்லாமல் வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டது உள்ளிட்ட முறைகேடுகளில் தேர்தல் அதிகாரியைக் கண்டித்து  ஏஐடியுசி-ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தினர்  இன்று (9-10-2920) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னிமலையில், பிஆர்எஸ் ரோட்டில் உள்ள சென்கோப்டெக்ஸ் நிறுவனம் முன்பு சங்க ஒன்றியப் பொறுப்பாளர்  ஆர்.ரவி  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில்ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, ஏஐடியுசி ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்க மாவட்டப் பொருளாளர் தோழர் எஸ்.பொன்னுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் கி.வே.பொன்னையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் ஆர்.கண்ணுசாமி, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் தோழர் எஸ்.ராஜ்குமார், சென்கோப்டெக்ஸ் நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தோழர்கள் மா.நாகப்பன், சி.கண்ணுசாமி உள்ளிட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்த அனைவரையும் சேர்த்து வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு முறையாகத் தேர்தல் நடத்தி நிர்வாகக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வலியுறுத்தி பேசியனர். ஆர்ப்பாட்டத்தில்  உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் நெசவாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, சென்கோப்டெக்ஸ் நெசவாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தனி அலுவலர் கே.நடராஜன் அவர்களிடம் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய புகார்மனு வழங்கப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக.ஆணையர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையரம், மாவட்ட தேர்தல் அதிகாரி (உதவி இயக்குனர், கைத்தறி மற்றும் துணிநூல்), மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கும் 8-10-2020 மின்னஞ்சல் மூலமும், இன்று(9-10-2020) பதிவுத் தபால் மூலமும் புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

                                                                               

Top