logo
தீபாவளி விபத்துகளை தடுப்பது எப்படி- தன்னார்வத் தொண்டர்களுக்கு பயிற்சி

தீபாவளி விபத்துகளை தடுப்பது எப்படி- தன்னார்வத் தொண்டர்களுக்கு பயிற்சி

09/Oct/2020 01:48:13

ஈரோடு:தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு மாதத்தில் வரவுள்ளதையொட்டி பட்டாசு வெடிப்பவர்களால் வெடிப்பவர்களுக்கும் .பொது மக்களுக்கும் ஏற்படும்  விபத்துகளை தடுப்பது குறித்து தன்னார்வத்தொண்டர்களுக்கு ஈரோடு தீயணைப்புத்துறையினரால் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. 

 ஈரோடு  தீயணைப்பு மற்றும் தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில்  நடைபெற்ற  தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த பயிற்சி முகாமின் போது தீயணைப்பு துறை தன்னார்வத் தொண்டர்களுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

 ஈரோடு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய உதவி மாவட்ட அலுவலர் சி. வெங்கடாச்சலம், நிலைய அலுவலர் சு. மயில்ராஜு,நிலைய அலுவலர் எஸ். வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்.  முகாமில்,பேரிடர், பெருந் தீ விபத்து, எளிதில் வெடிக்கக் கூடிய பொருட்கள் தயாரிப்பு ஆலைகளில் ஏற்படக்கூடிய தீவிபத்து, வெப்பம் தாங்காமல் வெடிக்கக் கூடிய ரசாயனங்கள் தயாரிக்கும் ஆலைகள் ஆகியவற்றில் ஏற்படும் தீவிபத்துகளில் எவ்வாறு மீட்புப் பணியில் ஈடுபடுவது. அந்த சமயங்களில் உயிருக்கு போராடுபவர்களை எவ்வாறு மீட்பது முதலுதவி சிகிச்சைகள் அளிப்பது என்பன உள்ளிட்ட பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள்   அளிக்கப்பட்டது. 

Top