logo
தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழி சேர்ப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழி சேர்ப்பு- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

09/Oct/2020 01:39:31

தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியையும் சேர்த்துமத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள். இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.  


Top