logo
நிகழாண்டில்  நீட் பயிற்சி பெற  18ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

நிகழாண்டில் நீட் பயிற்சி பெற 18ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

19/Nov/2020 06:26:20

ஈரோடு: நிகழாண்டில்  நீட் பயிற்சி பெற 18ஆயிரம் மாணவர்கள்  விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் எவ்வித குளறுபடிகளும் இல்லை என்றார்   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூடக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 அவசர ஊர்தி சேவையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

  அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன்   மேலும் கூறியதாவது: நீட்த்தேர்வு ரத்து செய்யவேண்டும் என்பதே அரசின் கொள்கை முடிவு. பிரதமரிடம் முதல்வர் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வருகிறார். 18ஆயிரம் மாணவர்கள் நீட் பயிற்சி பெற விண்ணப்பித்துள்ளனர்.  பள்ளிகள் திறப்பதற்கு முன் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என அறிவுறை வழங்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பள்ளிகள் திறக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். சில மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்தாலும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. 35 சதவிகிதம் கல்வி கட்டணத்தை பெற்றோர்களிடம்  வற்புறுத்தி வசூலிக்கக்கூடாது எனவும் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும் என  தனியார் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

தஞ்சையில்  வேளாண் சிறப்பு மண்டலம் அறிவிக்கப்பட்டு விவசாயிகளை பாதுகாக்கபட்டு வருகின்றனர். அனைத்து பள்ளிகளுக்கும் கல்வி கட்டணம் வசூல் செய்வது குறித்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளி திறப்பு குறித்து பெற்றோர் கல்வியாளர்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பிறகு முதல்வர் அறிவிப்பார். மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் எவ்வித குளறுபடிகளும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். 


Top