logo
திண்டுக்கல் சிறுமி பாலியல் கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு முடிதிருத்தும் கடைகள் அடைப்பு

திண்டுக்கல் சிறுமி பாலியல் கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு முடிதிருத்தும் கடைகள் அடைப்பு

09/Oct/2020 12:50:41

திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள்  இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், குரும்பம்பட்டி கிராமத்தில் மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்யப்பட்ட வழக்கில்  கொலை   செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், தாமதமாகும் பட்சத்தில் சிபிஐ விசாரணை கோரியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும்   இன்று  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து   போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இச்சம்பவத்துக்கு நீதி கேட்டு தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கம், தொழில் சங்கங்கள், மற்றும் சமுதாய சங்கங்கள் சேர்ந்து தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான முடிதிருத்தும் கடைகளை அடைத்து  இன்று ஒரு நாள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

ஈரோடு மாவட்டத்தில் 2,800 சலூன் கடைகள் அடைப்பு

திண்டுக்கல் மாவட்டம், குறும்பட்டி கிராமத்தில் முடிதிருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வாலிபர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை கண்டித்தும், இவ்வழக்கினை தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரி தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய அளவிலான ஒருநாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று,  ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, அந்தியூர், சத்தி, கோபி, தாளவாடி, பெருந்துறை, நம்பியூர், சென்னிமலை, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுவதும் 2800 சலூன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கடை முன்பு இது சம்பந்தமான நோட்டீஸ்கள்  ஒட்டப்பட்டுள்ளன.

Top