logo
காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தின் 107 மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை அளிப்பு

காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டத்தின் 107 மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை அளிப்பு

09/Oct/2020 11:11:12

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்திலுள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில்அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா  நேற்று  நடைபெற்றது.

விழாவில், ஊரகத்தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டு,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 34 பள்ளிகள்,செங்கல்பட்டு மாவட்டத்தில்73 பள்ளிகள் உள்பட மொத்தம் 107 மெட்ரிக் பள்ளிகளுக்கு 1.06.2020 முதல் 31.05.2022 வரை அங்கீகார ஆணைகளை வழங்கினர்.

பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ், கண்ணப்பன், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரிகணேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தனியார் பள்ளிகள் சங்கத்தலைவர் எஸ். பிரின்ஸ்பாபு ராஜேந்திரன், கிங்ஸ் மெட்ரிக்பள்ளி முதல்வர் எஸ். கீதா ஆகியோர் அனைத்துப்பள்ளிகள் சார்பாக ஏற்புரையாற்றினர்.

மெட்ரிக்பள்ளிகள் இயக்குநர் கே. கருப்பசாமி வரவேற்றார்.காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி நன்றி கூறினார். இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top