logo
ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக பெய்த மழையால் குறைந்த வெயில் தாக்கம்

ஈரோடு புறநகர் பகுதியில் பரவலாக பெய்த மழையால் குறைந்த வெயில் தாக்கம்

08/Oct/2020 05:16:54

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.இதனால் வாகன ஓட்டிகள் ,குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஈரோடு புறநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இங்கு அதிக பட்சமாக 36 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதுபோல் மொடக்குறிச்சி பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. கொடிவேரி அணைக்கட்டு பகுதியிலும் நல்ல மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் குளிர்ச்சியான  சூழ்நிலை நிலவி வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழைநீர் மி.மீட்டரில் வருமாறு சத்தியமங்கலம் - 36, மொடக்குறிச்சி-35, கொடிவேரி - 22.2, தாளவாடி - 6, எலந்தகுட்டை மேடு - 6,  கோபி - 2, நம்பியூர்-2, பெருந்துறை - 1.1.

பவானிசாகர் அணை பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து  நீர்வரத்து  மிதமான அளவில் வந்து கொண்டிருக்கிறது. இன்று  காலை  8 மணி நேர  நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 850 கன அடியும், கீழ்பவானி பாசனத்திற்காக 2300 கன அடி வீதம் என மொத்தம் 3150 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 


Top