logo
 ஈரோட்டில் மேலும் 63 பேருக்கு தொற்று- கொரோனாவுக்கு முதியவர் பலி

ஈரோட்டில் மேலும் 63 பேருக்கு தொற்று- கொரோனாவுக்கு முதியவர் பலி

15/Nov/2020 08:05:40

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது இதன் மூலம் நோய் உடனுக்குடன் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது மாவட்டம் முழுவதும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டது.

இதேபோல் காய்ச்சல் முகாமும் நடத்தப்பட்டது முக கவசம் அணியாமல் வருபவர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத வர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதுபோன்ற காரணங்களால் மாவட்டத்தில் வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

அதேபோல் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பை விட அதிலிருந்து குணமடைந்து வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. நேற்று சுகாதாரத்துறையினர் வழி கள்ளப்பட்டி மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 543 ஆக உயர்ந்து உள்ளது அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 105 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் குணமடைந்து எண்ணிக்கை 10,726 ஆக உயர்ந்துள்ளது தற்போது 688 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த 59 வயது ஆண் கடந்த 7-ஆம் தேதி வைரஸ் பாதிப்பு பெருந்துறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. மக்கள் வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கி விட்டது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


Top