logo
உலகளவில் 3.63 கோடி பேர் கொரோனா பாதிப்பு :10.60 லட்சம் பேர்  பலி

உலகளவில் 3.63 கோடி பேர் கொரோனா பாதிப்பு :10.60 லட்சம் பேர் பலி

08/Oct/2020 01:49:16

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பாதிப்புக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,74,08,529 பேர் குணமடைந்துள்ள நிலையில், 10,60,443 பேர் உயிரிழந்துள்ளனர். 

வியாழக்கிழமை முற்பகல் நிலவரப்படி, உலகளவில் 3,63,91,057 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,74,08,529 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 10,60,443 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 79,25,088    பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 67,426 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 77,76,224 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,16,784 பேர் பலியாகியுள்ளனர்.தொற்று பாதிப்பில்  இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 1,05,554 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்றாம் இடத்தில் பிரேசில் (50,02,357), நான்காம் இடத்தில் ரஷியாவும் (12,48,619) உள்ளது. உயிரிழப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 148,304 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 


Top