logo
இந்தியாவில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் புதிய ஆலைகள் தொடங்க அனுமதி

இந்தியாவில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் புதிய ஆலைகள் தொடங்க அனுமதி

08/Oct/2020 10:49:12

இந்தியாவில்  ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட 10 செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், 6 மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவை இந்தியாவில் புதிய ஆலைகளை அமைப்பதற்கு இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன் மூலம், உலகின் முன்னணி செல்லிடப்பேசி தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் ஆகியவை இந்தியாவை தனது பிரதான உற்பத்தி மையமாக படிப்படியாக மாற்றி வருகின்றன என்பது உறுதியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய செல்லிடப்பேசி தயாரிப்பு ஆலை, உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் அமைய இருப்பதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த லாவா, மைக்ரோமேக்ஸ், பேட்ஜெட் எலெக்ட்ரானிக்ஸ், யுடிஎல், ஆம்டிமஸ் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.15 ஆயிரத்துக்கு மேல் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் மட்டுமே இந்த நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படவுள்ளன. மேலும், இவற்றில் 60 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு அடிப்படையில் இந்த ஆலைகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 


Top