logo
மாற்றுத் திறனாளிகள், முதியோர் உறவினர்கள், தெரிந்தவர்கள் மூலம் ரேஷன் பொருள்களை பெறலாம்:  ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

மாற்றுத் திறனாளிகள், முதியோர் உறவினர்கள், தெரிந்தவர்கள் மூலம் ரேஷன் பொருள்களை பெறலாம்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

08/Oct/2020 01:01:11

புதுக்கோட்டை மாவட்டத்தில்   ஒரே நாடு ஒரே குடும்;ப அட்டை திட்டத்தின்படி நியாய விலைக் கடைகளில்  பொருட்களைப் பெற  மாற்றுத்திறனாளிகள்,முதியோர் தங்களது உறவினர்கள், தெரிந்தவர்களை நியமித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:    தமிழக அரசால் தற்போது  செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத்  திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் 1.10.2020 முதல்  ‘ ஒரே நாடு ஒரே குடும்;ப அட்டை” திட்டத்தின்படி அத்தியாவசியப் பொருட்களைப் பெற நியாய விலைக் கடைகளுக்கு  வரும் குடும்ப அட்டைதாரராகளுக்கு கைவிரல் ரேகை   ((Bio Metric Authentication)  அங்கீகரித்தல் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும். 

அவ்வாறு விநியோகம் செய்யப்படும் போது தமிழ்நாட்டில் வசிக்கும் புலம் பெயர;ந்த தொழிலாளர;களின் மின்னணு குடும்ப அட்டைக்கு இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மத்திய வழங்கல் விலையான பொது விநியோகத் திட்டத்தில் அரிசி 1 கிலோ ரூ.3-க்கும், கோதுமை 1 கிலோ ரூ.2-க்கும்  என தொகை வசூலிக்கப்படும்.  மேலும், தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம்  மற்றும் வார்டினை தவிர பிற  நியாய விலைக் கடைகளில் தங்களுக்கான  பொது விநியோகத் திட்ட  அத்தியாவசியப் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள்  சிரமமின்றி பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

  மாற்றுத் திறனாளிகள்,  வயது முதிர்ந்தோர் தங்களுக்கான பொருட்களைப் பெற தங்களது உறவினர்கள், தெரிந்தவர்களை நியமிக்கும் வகையில் அதற்குரிய படிவத்தில் அந்தநபர்களுக்கான அங்கீகாரச்சான்று விவரங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் அளிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் படிவத்தை சம்மந்தப்பட்ட தனி வட்டாட்சியர்  வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தால் கள ஆய்வு செய்யப்படும்.

இதையடுத்து  அந்தநபர் மூலமாக மாற்று திறனாளி வயது முதிர்ந்த  குடும்ப அட்டைதாரருக்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட  கைபேசி எண்ணில் பெறப்படும் ஒரு முறை கடவுச்சொல் மூலம் அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக்கடையில்  பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தெரிவித்துள்ளார். 


Top