logo
 மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

06/Oct/2020 09:23:34

புதுக்கோட்டை:   அறந்தாங்கி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கு புதுக்கோட்டை மகிளா நிதிமன்றம் தீர்ப்பளித்தது.


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தான வழக்கில் தொடர்புடைய  கூகனூரைச் சேர்ந்த காளிமுத்து மகன் கருப்பையா தங்கராஜ்(25)  என்பவர் மீது அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து குற்றவாளி  கருப்பையா தங்கராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி டாக்டர் ஆர்.சத்யா திங்கள்கிழமை(5.10.2020) தீர்ப்பளித்தார்.

மேலும், அபராதத் தொகையை செலுத்தத்தவறினால் கூடுதலாக ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவதுடன்,  அரசு இழப்பீடாக  ரூ. 2 லட்சத்தை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.  இதையடுத்து, தண்டனை பெற்ற குற்றவாளியை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று சிறையிலடைத்தனர்.

Top