logo
4 மாவட்டங்களில் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1043 ஊளியர்கள் நேரடியாக நியமனம்-ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:

4 மாவட்டங்களில் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு 1043 ஊளியர்கள் நேரடியாக நியமனம்-ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்:

13/Oct/2022 04:36:41

   விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. நவம்பர் 14-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

கூட்டிறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

4 மாவட்டங்களிலும் மொத்தம் 1043 பேர் பணியில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இந்த பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் போன்ற விவரங்கள் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளிடப்பட்டு உள்ளன.

சென்னை மாவட்டத்தில் 48 விற்பனையாளர்கள் 296 கட்டுனர் பணியிடங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 விற்பனையாளர், 160 கட்டுனர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 157 விற்பனையாளர் 21 கட்டுனர்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் 198 விற்பனையாளர்கள், 39 கட்டுனர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்படுகின்றன.

விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பெறப்படுகின்றன. அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


 

Top