logo
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா? ஸ்டாலின் டுவீட்

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா? ஸ்டாலின் டுவீட்

05/Oct/2020 11:26:10

சென்னை: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா? என்று கனிமொழி எம்.பி கைது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அராஜகத்தைக் கண்டித்து திமுக மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை. உ.பி.கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடக்கிறதா? அதிமுக அரசு தனது அராஜக  குணத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Top