logo
ரூ.1.22 கோடியில் முடிவுற்ற பல்வேறு பணிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

ரூ.1.22 கோடியில் முடிவுற்ற பல்வேறு பணிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

25/Aug/2022 08:35:19

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் ரூ.1.22 கோடியில் முடிவுற்ற பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.

 அறந்தாங்கி, திருவரங்குளம் ஒன்றியத்தில் ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது:

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், திருநாளூர் தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்     மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம், ஆலங்குடி பேரூராட்சி, நாடியம்மன் தெரு விரிவாக்கம் பகுதியில் ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் சாலை, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் ரூ.4.98 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகக் கருவிகளுடன் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகக் கட்டடம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கீழையூர் குழந்தை விநாயகர் கோயிலுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலைப் பணி, கீழையூரில் ரூ.3 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்கு பணி, திருநாளூர் ஊராட்சி முத்துமாரியம்மன் கோயில் அருகில் ரூ.4.24 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைப் பணி, ஆவணத்தான்கோட்டையில் ரூ.9.44 லட்சம் மதிப்பீட்டில் வடக்கு மயான சாலைப் பணி, குளமங்கலம் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் ரூ.5  லட்சம்  மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைப் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகள் பூமி பூஜை செய்து என மொத்தம் ரூ.1.22 கோடி  மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் திறந்து வைத்து,  புதிய திட்டப் பணிகள் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து,  சமூக மேம்பாடு மற்றும் மறுசீரமைப்பு அறக்கட்டளை சார்பில், ஆலங்குடியில் மரக்கன்றுகள் நடப்பட்டு,  தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.

  மாவட்ட வருவாய் அலுவலர்  மா.செல்வி, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், தலைமை மருத்துவர் மரு.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

Top