logo
சோலார் பகுதியில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 4 பேர் வாகன சோதனையில் பிடிபட்டனர்

சோலார் பகுதியில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 4 பேர் வாகன சோதனையில் பிடிபட்டனர்

20/Feb/2021 08:46:24

ஈரோடு, பிப்: ஈரோடு சோலார் பகுதியில் டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கிய 4 பேரை  வாகன சோதனை மூலம்  போலீஸார் கைது செய்தனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன்(46). சோலார், பாலுசாமி நகர் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மேல் கடையை பூட்டிவிட்டு கடைக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் டாஸ்மாக் கடையின் கதவை தட்டி மது கேட்டுள்ளனர்.

 அதற்கு ராஜன் கடையை பூட்டியாச்சு மது கிடையாது என கூறியுள்ளார். இதையடுத்து கணக்கு பார்த்து முடித்துவிட்டு ராஜன் வெளியே வந்தபோது மது கேட்டு நின்று கொண்டு இந்த நால்வரும் விற்பனையாளர் ராஜனை அங்கு கிடந்த காலி பீர் பாட்டிலை கொண்டு தலையில் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ராஜனை அருகிலிருந்தோர்  மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில்  சோலார் பகுதியில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் மோளகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், நோசிகட்டுவலசு சேர்ந்த அன்பரசன், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த தயாளன், சோலாரை சேர்ந்த நந்தகுமார் என்பதும் தெரியவந்தது.இவர்கள் நான்கு பேரும் சேர்ந்துதான் டாஸ்மாக் ஊழியர் ராஜனை தாக்கியது தெரியவந்தது. 

இதையடுத்து நால்வரையும் மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Top