logo
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம்

கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம்

27/May/2022 08:44:04

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம்,  ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில்  திருவிழா  மே. 15-ம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,அம்மன் வீதியுலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தன

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  திங்கள்கிழமையும் தீர்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றன. தொடர்ந்து, தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் குளத்தில் மின்விளக்குகளால்  அலங்கிரக்கப்பட்ட தெப்பத்தில், அம்மனை எழுந்தருளச்செய்து தெப்ப உற்சவம் நடைபெற்றது.தொடர்ந்து, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கீரமங்கலம் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Top