logo
ஈரோடு மாவட்டத்தில் மாயமானவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் மாயமானவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்

22/Nov/2020 05:57:08

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் மாயமானவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் இன்று  சார்பில் நடத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தி என 5  காவல் உப கோட்டங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள  காவல் நிலையங்களில்கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 257பேர் காணாமல் போய் உள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களை போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில், மாயமானவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்டத்தில் 5 இடங்களில் நடத்தப்பட்டது. இதில், ஈரோடு  காவல் உப கோட்டம் சார்பில் திண்டல் வேளாளர் கல்லூரியில் நடந்தது. இந்த முகாமிற்கு ஏடிஎஸ்பி கனகேஸ்வரி தலைமை வகித்தார்.  டவுன் டிஎஸ்பி ராஜூ முன்னிலை வகித்தார்.  இந்த முகாமில், பல ஆண்டுகளாக கண்டு பிடிக்க முடியாதவர்கள், சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் போன்ற புகார்கள் அளித்த  உறவினர்களை போலீசார் வரவழைத்தனர். 

பின்னர், மாநிலம் முழுவதும் சமீபத்தில் நடந்த சாலை விபத்துக்களில் இறந்து போன அடையாளம் தெரியாதவர்கள், சாலையோரம் சுற்றிதிரிந்து வருபவர்கள், காப்பகத்தில் இருக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரின் புகைப்படங்களையும், ஈரோடு மாவட்டத்தில் மாயமானவர்களுடன் புகைப்படங்களையும், அதில் கூறப்பட்டுள்ள அங்க மச்ச, அடையாளங்களுடன் ஒப்பிட்டு உறவினர்களிடம் காண்பிக்கப்பட்டது.

 இதில், நகர உப கோட்டத்தில்(டவுன் சப் டிவிசன்)  103 மாயமானவர்களில், 74 பேருடன் ஒத்துவரக்கூடிய  புகைப்படத்தை போலீசார் காண்பித்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் மாயமானவர்கள் உறவினர்கள் அவர்கள் இல்லை என மறுத்து விட்டனர். ஒரு சிலரின் அடையாளங்கள் ஈரோடு மாவட்டத்தில் மாயமானவர்களின் அடையாளத்துடன் பொருந்தி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 


Top