logo
கீரமங்கலம் அருகே நாயை விரட்டியதால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளர் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்.

கீரமங்கலம் அருகே நாயை விரட்டியதால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளர் உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்.

19/May/2022 08:27:20

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே கடிக்க வந்த நாயை விரட்டியதால் தாக்கப்பட்ட உணவக உரிமையாளர் உயிரிந்தார்.தாக்கியவர்களை உடனே கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

 கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ஆர்.அருள்(38). கீரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உணவகம் நடத்தி வரும் இவர், புதன்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இடையில், மோட்டார் சைக்கிள் பெட்ரோல் இல்லாமல் நின்றதால், தள்ளிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்ற நாய் ஒன்று அருளை துரத்திக் கடிக்கச்சென்றுள்ளது. அதனால், அருள் நாயை விரட்டியடித்தாக கூறப்படுகிறது. இதனால் வேம்பங்குடி மேற்கு பகுதியைச் சேர்ந்த அ.திணேஷ்(30), தர்மர் கோயில் தெருவைச் சேர்ந்த அண்ணாத்துரை மகன் சுரேஷ்குமார்(22) ஆகிய இருவரும் அருளை தாக்கியதாகக்கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அருளை அருகில் இருந்தவர்கள்  மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

 இதுகுறித்து, அருளின் மனைவி சுதா அளித்த புகாரைத்தொடர்ந்து, கீரமங்கலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 இந்நிலையில், அருளின் உறவினர்கள், தாக்கியவர்களை உடனே கைது செய்யவேண்டும், அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டுமென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற கீரமங்கலம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Top