logo
கலாம் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் அளிப்பு

கலாம் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் அளிப்பு

15/Oct/2020 03:21:31

புதுக்கோட்டை: முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் அவர் சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவரும் அணு சக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள ஏபிஜே. அப்துல் கலாம் உருவ சிலைக்கு சாய் பவுண்டேஷன்  நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது. மேலும், அப்துல் கலாம் உருவப்படத்திற்கு பள்ளி மாணவ மாணவிகளும் மலர் தூவி மரியாதை செய்தனர்விழாவில் அரசு மருத்துவர் முத்துராஜா மற்றும் விதைக்கலாம் அமைப்பினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Top