logo
பேலஸ்சிட்டி ரோட்டரி  சார்பில் மாணவிகளுக்கு மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர்  சாமி சத்தியமூர்த்தி  முகக்கவசம்   வழங்கினார்

பேலஸ்சிட்டி ரோட்டரி சார்பில் மாணவிகளுக்கு மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி முகக்கவசம் வழங்கினார்

02/Sep/2021 11:42:50

புதுக்கோட்டை, செப்: புதுக்கோட்டையில் பள்ளிகள்  9 முதல் 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. புதுக்கோட்டை  பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்  சாமி சத்தியமூர்த்தி  பங்கேற்று, பள்ளிக்கு வந்த  மாணவிகளுக்கு     முகக்கவசம் வழங்கினார். மேலும்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் பி.பிரான்சிஸ் மேரி, சாலை விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினார்.

நிகழ்வில், பள்ளித்தலைமை ஆசிரியர்  கல்வி அலுவலர்கள் முன்னாள் நகர்மன்றதுணைத் தலைவர் நைனாமுகமது  பேலஸ்சிட்டி ரோட்டரி சங்க  செயலாளர் பாஸ்கர் மற்றும் துணை ஆளுனர் கருணாகரன்  முன்னாள் தலைவர்கள் ரவிச்சந்திரன், செல்விதுரைமணி, பள்ளியின் ஆசியர்கள் கலந்துகொண்டனர்.

  

 பள்ளிகள், கல்லூரிகள்மீண்டும் திறக்கப்பட்டன. உற்சாகமாக பள்ளி, கல்லூரி வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே வகுப்புக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. வகுப்பறையில் 50% மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். தடுப்பூசிகள் போட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். பள்ளி சீருடையுடன் பஸ்சில் மாணவர்கள் பயணம் மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் இன்று 13 ஆயிரத்து 605 பள்ளிகள் திறக்கப்பட்டன. 

கல்லூரிகளை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர பிற மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும், அதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் அனைத்து நாட்களிலும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டும் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் கல்லூரிகள் இயக்கப்பட உள்ளது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்பட்டன.


Top