logo
ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.40 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்: நடத்திவந்த கடைகளை காலி செய்யப்பட்டன

ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.40 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்: நடத்திவந்த கடைகளை காலி செய்யப்பட்டன

02/Sep/2021 12:00:25

ஈரோடு : ஈரோடு பஸ் நிலையத்தில் ரூ.40 கோடி மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்: நடத்திவந்த கடைகளை உரிமையாளர்கல் காலி செய்தனர்.

ஈரோடு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக சத்தி ரோடு பகுதியில் உள்ள இரு சக்கர, நான்கு சக்கர ஸ்டாண்டுகள் இடித்து அகற்றப்பட்டன. இதையடுத்து சத்தி ரோடு பகுதியில் உள்ள பழைய ஆர்.டி.ஓ. அலுவலகமாக செயல்பட்ட கட்டிடம், அந்த பகுதியில் உள்ள டீ, பழக்கடைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே இந்த கடைகளை காலி செய்ய வலியுறுத்தி உள்ளனர். 

கடைகளை காலி செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். இதையடுத்து கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் கடையில் உள்ள பொருட்களை அகற்றி வருகின்றனர். கடையில் இருக்கும் டேபிள்கள், பலகைகள், ஸ்டாண்ட், ஏ.சி, மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை வேன்களில் ஏற்றி சென்றனர். மேலும் பஸ் நிலையத்தில் உள்ள சேதமடைந்த தூண்கள், ரேக்குகள் சீரமைக்கப்படுகின்றன. மேலும் பஸ் நிலையம் சுற்றிலும் சுற்றுச் சுவர் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

Top