logo
ஈரோடு மாவட்டத்தில்  மேலும் 138 பேருக்கு தொற்று:  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்  எண்ணிக்கை 1,638 ஆக குறைவு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,638 ஆக குறைவு

25/Aug/2021 07:10:11

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில்  மேலும் 138 பேருக்கு தொற்று:  கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்  எண்ணிக்கை 1,638 ஆக குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 9 -ஆம் தேதி முதல் 23ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய நேரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர மற்ற கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய கடை வீதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. 

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் பயனாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த 5 நாட்களாக தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 138 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 97, ஆயிரத்து 572 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த சில நாட்களாக தினசரி  பாதிப்பை விட குணமடைந்தவர்கள்  எண்ணிக்கை  தொடர்ந்து அதிகரித்து வருவது நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரே நாளில் 168 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 643 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 1,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Top