logo
ஈரோடு மாவட்டத்தில் 4 -ஆவது நாளாக பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 4 -ஆவது நாளாக பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

17/Apr/2021 10:32:35

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் 4 -ஆவது நாளாக பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. காலை முதல் மாலை வரை அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்ததால் குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக ஈரோடு மக்களை மகிழ்விக்கும் வகையில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. 

இந்த கனமழையால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள் ளது.சத்தியமங்கலம், கோபி. பவானியில், மொடக்குறிச்சி கொடுமுடி, பெருந்துறை, ஈரோடு மாநகர் பகுதி எனபரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று 4-ஆவது நாளாக மாவட்ட த்தில் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

குறிப்பாக பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதேபோல் ஈரோடு, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, பவானி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையமும் ஈரோடு மாவட்டத்தில் கனமழை இருப்பதாக அறிவித்துள்ளது. 

 ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு ஒன்பது மணிக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பரவ லாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Top