logo
ஈரோடு மாநகர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது

ஈரோடு மாநகர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது

22/Aug/2021 11:38:32

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில்  சனிக்கிழமை நள்ளிரவு 3.30 மணி முதல் மாநகர் பகுதியில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தற்போது திட்டப் பணிகள் நடந்து வருகின்றன இதற்காக ரோடுகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் இந்தப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோடு பகுதியில் தற்போது வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், திடீரென பெய்த மழையால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக ரோடு  காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதைப்போல் மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி பகுதியிலும் இரவில் பலத்த மழை பெய்தது. ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:ஈரோடு - 42, மொடக்குறிச்சி - 31, கவுந்தப்பாடி - 18, பவானிசாகர் - 3.4, அம்மாபேட்டை - 3.

Top