logo
தொடர் மழை எதிரொலி: ஈரோடு சென்னிமலை ரோட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் போக்கு வரத்து மாற்றம்

தொடர் மழை எதிரொலி: ஈரோடு சென்னிமலை ரோட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் போக்கு வரத்து மாற்றம்

22/Aug/2021 11:34:16

ஈரோடு, ஆக: தொடர் மழை காரணமாக ஈரோடு சென்னிமலை ரோட்டில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது  போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

ஈரோடு மாநகர பகுதியில்வெள்ளிக்கிழமை  முதலே சாரல் மழை பெய்தது. சனிக்கிழமை  நள்ளிரவு 3:30 மணி முதல் காலை வரை பரவலாக மழை பெய்தது. இந்நிலையில்,ஈரோடு சென்னிமலை ரோட்டில் ரெயில்வே பணிமனை அருகே உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இரவில் இடிந்து சென்னிமலை ரோட்டு பகுதியில் விழுந்தது. அந்தச் சுற்று சுவரை சுற்றி ஏற்கனவே கழிவு ஆயில் சூழ்ந்திருந்தது. இந்நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் திடீரென ஒரு பகுதி இடிந்து விழுந்தது இதனால் அந்தப் பகுதியில் கழிவு ஆயிலுடன் மழை நீர் சேர்ந்தது. 

இந்த ரோடு வழியாக தான் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி செல்ல முடியும் அதே போல் சென்னிமலைக்கு செல்லும் பஸ்கள் வழியாகத்தான் சென்று வருகிறது. திடீரென சுவர் இடிந்து சென்னிமலை செல்லும் ரோடு பகுதியில் விழுந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு வழியாக சென்று கொண்டிருந்த பஸ் போக்குவரத்தை போக்குவரத்து போலீசார் மாற்றி அமைத்தனர். 

அதன்படி, சுவர் இடிந்து விழுந்த பகுதி மற்றும் போக்குவரத்தை நிறுத்தி அதற்குப் பதிலாக சென்னிமலையில் இருந்து ஈரோட்டுக்கு வரும் வழி சாலையில் போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். இடிந்து விழுந்த சுவரை அப்புறப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Top