logo
ஈரோட்டில் ராஜீவ் காந்தி இன்று பிறந்த நாள்: உருவப் படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

ஈரோட்டில் ராஜீவ் காந்தி இன்று பிறந்த நாள்: உருவப் படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

22/Aug/2021 10:24:36

ஈரோடு, ஆக: ஈரோட்டில் ராஜீவ் காந்தி இன்று பிறந்த நாள்: உருவப் படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரசார் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஈரோடு ஜிஹெச் ரவுண்டானா அருகே உள்ள காமராஜர் சிலை அருகே ராஜீவ் காந்தி உருவ படத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மண்டலத் தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், அம்புலி, திருச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் புனிதன்,  அரவிந்தராஜ், அம்மன் மாதேஷ் பாஸ்கர்ராஜ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கண்ணப்பன், கனகராஜ், வின்சென்ட், இளைஞர் காங்கிரஸ் விஜய கண்ணா, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி, மாவட்ட செயலாளர்கள் சிவா, பிரகாஷ், சதாம் உசேன், சூரிய சாதிக், சசிகுமார், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ராஜீவ் காந்தி படத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.எம்.பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top