logo
புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா

19/Aug/2021 11:42:16

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியும் புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கமும் இணைந்து சுதந்திரதினம், விருது வழங்கல், பரிசளிப்பு  என முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி  தலைமை வகித்தார். அறங்காவலர் மற்றும் பள்ளி ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். எம். துரைமணி; கலந்துகொண்டு கொடியேற்றி சுதந்திர தின வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் துணை ஆளுநர் ஆர். கருணாகரன் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்தினார்.  மாணவ மாணவிகள் சுதந்திரதின விழாவில் தேசத்தலைவர்களைப் பற்றி உரையாற்றினார்கள். 

விழாவின் சிறப்பு நிகழ்வாக, கொரோனா பேரிடர் காலத்தில் சேவை புரிந்த, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்  மருத்துவர்   பி. கலைவாணி ,  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  செவிலியர்கள் எஸ். ராஜேஸ்வரி, பி. பானுப்பிரியா, அவசர மருத்துவ உதவியாளர் 108 ஆம்புலன்ஸ் சேவை   என். பிரகாஷ் , இலவச அமரர் ஊர்தி சேவை  ஓட்டுனர்     கே. முத்துக்குமார் ஆகியோருக்கு  விருதுகள் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

 பள்ளியில் அனைத்து மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் வகுப்புவாரியாக நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கும் குலுக்கல் முறையில் அதிருஷ்ட  பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பெற்றோர்களும் மாணவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து கலந்துக் கொண்டனர். போட்டியில் வெற்றிப்பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். 

சுதந்திர தினத்தன்று பிறந்த நாள் கொண்டாடிய மாணவர்கள் பி. ஜெயஸ்ரீ,  ஜி. சாய்மதி, எ. ஸ்ரீஜா, எஸ். அஸ்மிதா ரிபானா ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக கே. பாஸ்கரன் அவர்கள் நன்றி கூறினார்.  

எம். எஸ். ரவி, பேராசிரியர் எம். கருப்பையா, வழக்குரைஞர்  செந்தில்குமார், மகாத்மா  ரவிச்சந்திரன், என். வேங்கடசுப்பிரமணியன், பள்ளியின் துணை முதல்வர் எஸ். குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, துர்காதேவி, வெங்கடேஸ்வரன் மற்றும் பள்ளி மேலாளர் ராஜா, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வீரமணி, தினேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியை பவானி மற்றும் ஆசிரியை ஆனந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.   


Top