logo
திமுகவின் 100 நாள் ஆட்சியைப் பொறுத்தவரையில்  சாதித்தது எதுவும் இல்லை: பாஜக நிர்வாகி சி.பி. ராதாகிருஷ்ணன்

திமுகவின் 100 நாள் ஆட்சியைப் பொறுத்தவரையில் சாதித்தது எதுவும் இல்லை: பாஜக நிர்வாகி சி.பி. ராதாகிருஷ்ணன்

17/Aug/2021 05:12:28

ஈரோடு, ஆக: திமுகவின் 100 நாள் ஆட்சியைப் பொறுத்தவரையில் சாதித்தது எதுவும் இல்லை என்றார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன்

ஈரோட்டில்  சி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் தாமரை மலாராது என்று  கூறியவர்களுக்கு ஒரு பாடமாக பாஜகவினர் வெற்றி அமைந்து உள்ளது.ஜி.எஸ்.டி.கீழ் பெட்ரோல் டீசல் விலையை கொண்டு வரும் போது ஒரு லிட்டருக்கு 30 ரூபாய் வரை குறையும் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வர மாநில அரசு தான் தடையாக உள்ளது.

மத்திய அரசு தயராக உள்ளது.மத்திய அரசின் மீது தேவையற்ற பழி சுமத்துவது தான் திமுகவின் வாடிக்கையாக உள்ளது.அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை பொறுத்தவரையில்  தர்மம் நின்று வெற்றி பெரும் .தர்மத்தை சீர் குலைக்கும் சக்தி யாருக்கும் கிடையாது. 2 ஜி வழக்குகளின் போது திமுகவினர் என்ன சொன்னார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். சொல்வதோன்றும் செய்வதோன்றும் தான் திமுகவின் வரலாறு.

லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினால் அவர்கள் ஒன்றும் குற்றவாளிகள் கிடையாது. எதையும் எதிர்கொள்வது தான் பொது வாழ்க்கையாக இருக்கும் அந்த வகையில் அதிமுக தீரத்துடன் திமுகவின் பழி வாங்களை எதிர் கொள்வதாக தான் கருதுகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி தான் வெற்றி பெற்றார்கள் .தள்ளாடி தள்ளாடி தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். 

மின்கட்டணத்தில்  ஒரு ரூபாய் குறைக்க வேண்டும் என்று கூறி போராடிய  விவசாயிகளை சுட்டு வீழ்த்திய வரலாறு தான் திமுகவின் வரலாறு.தங்களின் வரலாறு தவறுகளை மறைத்து, விவசாயிகளிடம் நட்பாக இருப்பது போல காட்டுவதற்காக இந்த பட்ஜெட்டை தூக்கிப்பிடிக்கிறார்கள்.

திமுகவின் நீட் தேர்வு எதிர்ப்பு என்பது  மாணவர்களை குழப்ப வேண்டும் .திமுக ஏதோ உச்சநீதிமன்றத்தை விட பெரியது போல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஏழை மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை கெடுக்கின்ற செயலாக தான் திமுகவின் நீட் தேர்வு எதிர்ப்பை பார்க்கிறோம்.

ஒரே ஆண்டில் அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும் போது தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை மத்திய அரசு அனுமதியுடன் கொண்டு வந்துள்ளனர்.இதனால் தான் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ துறையில் மிக எளிதாக இடம் கிடைக்க வழிவகை செய்து உள்ளது.திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது ஒரு மருத்துவ கல்லூரிகளை கூட கொண்டு வந்தது இல்லை.இவர்கள் பேசுவதை தவிர  செயலில் ஒன்றும் இல்லை என்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.



Top