logo
ஈரோடு மாவட்டத்தில்  கொரோனா விதிமுறை மீறியதாக இதுவரை ரூ. 21.80  லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விதிமுறை மீறியதாக இதுவரை ரூ. 21.80 லட்சம் அபராதம் வசூல்

21/Jan/2021 10:28:37

ஈரோடு, ஜன: ஈரோடு மாவட்டத்தில்  கொரோனா விதிமுறை மீறியதாக இதுவரை ரூ. 21.80  லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் முதலில் அதிகரித்து வந்தது குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் .பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. 

ஆனால், இதை பெரும்பாலும் மக்கள் கடைப்பிடிக்காததால் முகக்கவசம் அணிந்து வராமல் வருபவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு ரூ.500, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பெரிய நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

 இதையடுத்து மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணியாளர்கள் வருவாய்த் துறையினர், போலீசார் மாநகராட்சி பணியாளர்கள் அபராதம் விதித்து வந்தனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்

Top