logo
மருமகளால்   கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுத் தர க்கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் மனு

மருமகளால் கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுத் தர க்கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் மனு

11/Aug/2021 07:26:57

ஈரோடு, ஆக: ஈரோடு அருகே மருமகள் வீட்டாரால்  கடத்தப்பட்ட தங்களது மகனை மீட்டுத் தர க்கோரி ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் மனு அளித்தனர்.

ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு இன்று பவானி லோகநாதன் ஹாஸ்பிடல் ரோடு பகுதியைச் சேர்ந்த இந்திராணி  என்பவர் தனது கணவர் யோகவேலுடன் வந்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எங்களது மகன் நரேஷ் கிருஷ்ணாவுக்கும், வேலூரைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கும்  கடந்த 2017-ல் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. மருமகள் நடத்தை சரியில்லாததாலும்

கருத்து வேறுபாடு காரணமாகவும் கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நீதிமன்றத்தில்  விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி இரவு முடிவெட்டும் கடைக்கு சென்று வருவதாக எனது மகன் கூறிவிட்டு சென்றார். ஆனால் எங்களது மகன் திரும்பி வரவில்லை. எங்களது மகனை மருமகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் அடியாட்கள் வந்து மகனை தாக்கி மகனை வேலூருக்கு கடத்தி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாங்கள் கோபி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம்.போலீசார் மருமகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு  நரேஷ் கிருஷ்ணாவை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க கூறினர். ஆனால் அவர்கள் ஒப்படைக்கவில்லை.

பின்னர் போலீசார் வேலூர் சென்று புகார் செய்ய சொன்னார்கள்.  என் மகனை அடித்து சித்திரவதை செய்து பல லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுகின்றனர்  இந்த மருமகள் பெற்றோர் எங்களை வேலூருக்கு வரும்படி வருகின்றனர். அவர் அங்கு சென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து எனவே எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளித்தும், கடத்தப்பட்ட எங்களது மகனை  உயிருடன் மீட்டுத்தர வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர். 

                                                   

        


Top